பாலகிருஷ்ணாவை ஆந்திராவில் லயன் என்று அழைக்கிறார்கள். அந்தப் பெயரில் அவர் படமும் நடித்திருக்கிறார். தொடையை தட்டி ரயிலை கவிழ்ப்பது, சுமோவை கையில் சுழற்றி தூக்கி எறிவது, ஹெலிகாப்டரை பறந்து பல்லால் கடிப்பது, கடப்பாரையை கடித்து துப்புவது என்று ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கலவரமாகும் சாகஸங்களை ஒவ்வொரு படத்திலும் செய்து வருகிறார் பாலகிருஷ்ணா.
அப்படிப்பட்ட சிங்கம், பாடல் காட்சிகளில் காட்டும் பரவசம் அளவிட முடியாதது. கிராபிக்ஸில் அந்தரத்தில் நடப்பார். கட்டை விரலை ஊன்றி கர்ணம் போடுவார். இன்னும் என்னென்னவோ செய்வார். எப்படி நடிகைகள் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்கிறார்கள் என்பது நீங்காத பிரமிப்பு.
பாலகிருஷ்ணாவின் 99 -வது படத்தை ஸ்ரீவாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் சோனல் சௌகான், அஞ்சலி என்று இரு ஜோடிகள். சோனல் சௌகான் ஏற்கனவே லெஜென்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார். இது இரண்டாவது முறை.