விஷாலின் ரசிகர் மன்றம் மூலமாக வெள்ள நிவாரணம் வழங்கும் சோனா

திங்கள், 30 நவம்பர் 2015 (11:55 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' என்ற புதிய அமைப்பை சோனா உருவாக்கியிருக்கிறார்.


 


நடிகை சோனா எது செய்தாலும் கான்ட்ரவர்ஸியின் மணம் அடிக்கத்தான் செய்யும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' என்ற புதிய அமைப்பை சோனா உருவாக்கியிருக்கிறார்.
 
இந்த அமைப்புக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் அரிசி முதல் குளியல் சோப்புவரை எதை வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். மக்கள் பாதிக்கப்படும் போது இப்படி அமைப்புகள் தொடங்கி உதவுவது சகஜம்தான். இதில் கான்ட்ரவர்ஸி எங்கு வந்தது?
 
'ரைஸ் பவுல் சேலஞ்ச்' அமைப்புக்கு மக்கள் நன்கொடையாக தரும் பொருள்களை சோனா நேரடியாக விநியோகித்தால் கேள்வி கேட்க எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பொருள்களை நடிகர் சங்கத்தின் புதிய செலாளராக பொறுப்பேற்றிருக்கும் நடிகர் விஷாலின் ரசிகர் மன்றத்தின் வழியாக விநியோகிக்கயிருக்கிறார்.
 
சோனா விஷாலின் ரசிகர் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டாரா என்ன?

வெப்துனியாவைப் படிக்கவும்