அஜித் 57 படத்தின் தலைப்பு என்ன? சமூகவலைதளங்களில் குழப்பம்!

ஞாயிறு, 29 ஜனவரி 2017 (14:38 IST)
நடிகர் அஜித், நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், அப்படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சமூக வலைத்தளத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


 
 
அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் ஆங்கிலத்தில் V என்று தொடங்கும் படியாக இருந்தது. இந்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால், அஜித் தற்போது நடிக்கும் படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்பு தான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது. 
 
இதையடுத்து, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ளது. 
 
அப்போது இப்படத்தின் தலைப்பு குறித்த வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்