நான் எப்போதும் வேலைக்காரன் தான்... சிவகார்த்திகேயன் பேச்சு!

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (21:08 IST)
கனா இசை மற்றும் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது "தயாரிப்பாளர் அப்படீன்றது போடவேண்டிய கிரிடிட்தான். ஆனால் நான் எப்பவுமே வேலைக்காரன். அப்படி இருக்கனும்னுதான் நான் ஆசைப்படுறேன். அது எடுக்கவேண்டிய முயற்சி, எடுக்க வேண்டிய கட்டம். 
 
இந்த படம் ஆரம்பிச்சத சொல்லனும். அருண் ராஜா வந்து ஒவ்வொரு முறையும் பாட்டெழுதி ஹிட்டாகும் போது வாழ்த்துறத தாண்டி திட்டுவேன். இதுலயே கம்பெர்ட் ஆகிறாத, நீ டைரக்டர் ஆகனும் வந்த, டைரக்டர் ஆகிடனும் சொல்லி ஒவ்வொரு வாட்டியும் திட்டிக்கிட்ட இருப்பேன். 
 
அப்புறம் தோனுச்சு அவருக்கு யேதாவது ஐடியா கொடுக்கனும், பண்ண வைக்னும்னு நினைச்சேன். அருண்ராஜாவிடம் கிரிக்கெட் வைத்து ஒரு கதை பண்ண சொன்னேன். நான் என்ன மாதிரி பண்ண சொன்னேன்னா, ஊர்ல எல்லாம் கிரிக்கெட் விளையாடுவாங்கள்ள அந்த மாதிரி கதையை பண்ண சொன்னேன். 
 
ஒரு நாளு நாளைக்கு பின்னாடி, இன்டர்நேசல் கிரிக்கெட்டைவைச்சு பண்ணலாம். ஆனால் அது வுமன்ஸ் (பெண்கள்) கிரிக்கெட்டு அப்படிடீன்னு அருண் ராஜா சொன்னார், அதுக்கு நானு ஏன் இப்படி பண்ற, அதுக்கு நடிக்குறதுக்கு எல்லாம் இங்க ஆள் எல்லாம் கிடையாது, எப்படி பண்ண முடியும் என்று கேட்டேன். அதுக்கு அருண்ராஜா, இதனை டெவலப் செய்துவிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு போனார். 
 
அதன்பின்னர் வந்து ஒரு விவசாயியின் மகள் இன்டர்நேசனல் கிரிக்கெட் விளையாடுவதாக கதையின் லைனை அருண்ராஜா சொன்னார். இதை கேட்டுக்கும் போது நம்ம ஆச்சர்யமா இருந்துச்சு. எப்படி கதையை பண்ண முடியும். அதுக்கு ஏத்த ஆட்களா எப்படி நடிக்க கண்டுபிடிப்பது என்பது சிந்தனையாக இருந்தது. இந்த கதையை கேட்கும் போதே, இதனை நான்தான் ப்ரொடியூஸ் (தயாரிக்கனும்) பண்ணனும்னு முடிவு செஞ்சுட்டேன். 
 
ஆனா அருண்ராஜா கிட்ட இதை சொல்லல. ஏன்னா அவனிடம் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதைப்போய் ஒர ப்ரொடியூசர்கிட்ட சொல்லனும். அவங்க ஒத்துக்கணும் என நினைத்தேன். அப்புறம் தேடலின் அருண்ராஜாவிடம் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அப்புறம் தான் படம் தொடங்கியது" இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்