இளம் சூப்பர் ஸ்டார்: சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம்!!

வெள்ளி, 9 ஜூன் 2017 (11:51 IST)
‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 


 
 
இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என அழைத்தார். 
 
நடிகர் சிவகார்த்திகேயன் இது பற்றி பேசும் போது, பட்டம் எல்லாம் எமக்கு தேவையில்லை. சாதாரண மனிதனாக மக்களை மகிழ்விப்பதே போதும் என்று கூறினார்.
 
மேலும், இந்த விழாவில் கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்