''சிவகார்த்திகேயன்21 '' பட புதிய அப்டேட் எப்போது?... ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்

Webdunia
வியாழன், 4 மே 2023 (19:36 IST)
‘’சிவகார்த்திகேயன் 21’’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று ராஜ்கமல் இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக  தகவல்  வெளியானது.

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை., இதற்கிடையே சிவகார்த்திகேயன் அயலான் மற்றும்  மாவீரன் படங்களில்  நடித்துள்ளார்.  இதில், அயலான் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே21 படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

இந்த படம் காஷ்மீர் பின்னணியில் ராணுவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்