நடிகர் சங்க சரித்திரத்தில் முதல்வரின் பெயர் - நடிகர் சங்கம் அறிக்கை

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (14:00 IST)
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்ததும் திரையுலகினர் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
 
அம்மா விசுவாசியான நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், அதிமுக உறுப்பினரான செயலாளர் ராதாரவியும் உடனடியாக கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
 
"மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும்" - என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்