இரண்டாவது வாரத்தில் அதிக தியேட்டர்கள்… வசூலில் கலக்கும் சீதாராமம்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆன சீதா ராமம் திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதை அடுத்து நல்ல வசூலை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது இந்த படத்துக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளதாம். சீதாராமம் படத்தோடு வெளியான மற்ற படங்கள் எதுவும் சோபிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்