சிங்கிள் பாடல் பாடிய நடிகர் விஜய்

சனி, 26 நவம்பர் 2016 (15:06 IST)
தான் நடிக்கும் படங்களில், ஒரு பாடலையாவது பாடுவது நடிகர் விஜய் வழக்கம். துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி வரிசையில் தற்போது பைரவா படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய்.

 
இந்த பாடலின் பாடல் பதிவு சிறப்பாக முடிந்ததாகவும், விஜய் நம்பமுடியாத அளவிற்கு அந்த பாடலை பாடியுள்ளதாகவும் அதிரவைக்கும் நடனம் உத்தரவாதம் என்றும் பைரவா படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து ஏழாவது முறையாக தன்னுடைய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய். பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் அன்று வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்