சிங்கம்.... இது கொஞ்சம் அதிகமில்லையா?

புதன், 8 பிப்ரவரி 2017 (17:41 IST)
பிலிமில் படம் எடுக்கும் போது ஒரு கணக்கு இருந்தது. திரைக்கதையை ஓரளவு பக்காவாக எழுதி படமெடுத்தார்கள். பிலிம் வீணானால் பணம் வீணாகும்.


 

இப்போது அந்த கவலையில்லை. சின்ன சிப்பில் எத்தனை அடி வேண்டுமானாலும் எடுக்கலாம் அழிக்கலாம் அழித்தும் எடுக்கலாம். இதனால் எடிட்டர்களுக்குதான் தலைவலி. ஒரு படத்துக்கு நாலு பட்த்தின் புட்டேஜை கொண்டுவந்து கொட்டுவார்கள். அதிலிருந்து ஒரு படத்தை செதுக்க வேண்டும்.

சி 3 படத்துக்கு ஹரி படமாக்கியது சுமார் 17 லட்சம் அடிகள். ஆனால் சி 3 படத்தின் நீளம் வெறும் 14 ஆயிரம் அடிகள். எடுத்ததில் கிட்டத்தட்ட 99.2 சதவீதத்தை வேஸ்ட் என்று தூர கடாசியிருக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்துக்காக ஹரியின் பெயர் கின்னசில் இடம்பிடித்தாலும் பிடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்