திரையரங்கு உரிமையாளர்கள் பைரவாவுக்கு முன்னுரிமை பின்னுரிமை உள்பட எல்லா உரிமைகளும் கொடுப்பதால், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்துக்கு தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் ஜனவரி 14 -ஆம் தேதிக்கு வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளார்.
இந்த தேதியிலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி மாதத்துக்கு படவெளியீட்டை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார். அவர் பேசுவதைப் பார்த்தால் கோடிட்ட இடங்களை நிரப்புக பிப்ரவரியில்தான் வரும் போலிருக்கிறது.