வாலு படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - புதிய சிக்கலில் சிம்புவின் வாலு

புதன், 8 ஜூலை 2015 (10:26 IST)
சிம்பு நடித்து கடந்த 3 ஆண்டுகளில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஒரு படத்தை தொடங்கிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவதால் வந்த இடைவெளி இது. வாலு படம் சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டும். பல்வேறு தடைகள். இப்போது டி.ஆர். தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் படத்தை இந்த மாதம் 17 -ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தார்.
அதற்கும் இப்போது பிரச்சனை.
 
வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை மேஜிக் ரேஸ் என்ற நிறுவனத்துக்கு 10 கோடிக்கு தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். இப்போது வேறு ஒருவர் மூலமாக படத்தை வெளியிட முயற்சிக்கிறார்கள். அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இந்த வழக்கு காரணமாக, படம் திட்டமிட்டபடி 17 -ஆம் தேதி வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்