இன்று முதல் மீண்டும் தொடங்கும் மாநாடு படப்பிடிப்பு – பிஸி மோடில் சிம்பு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (10:27 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கடட படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து படமாக்க உள்ளனர் படக்குழுவினர். அதற்காக இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் நடக்க உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு மாலத்தீவுகளுக்கு சென்று பத்து தல படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடிக்க உள்ளார் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் பெரிய அளவில் ரிலீஸாகாத நிலையில் இனி வரும் ஆண்டுகளில் அதிகப் படங்களில் நடிக்கும் முடிவில் உள்ளார் சிம்பு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்