நாளை சிம்புவின் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு?

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:54 IST)
சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளிவரும் என தகவல்கள் வெளிவந்த உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பத்துதல என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதும் இதனை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்தது. இந்த படத்தின் அறிவிப்பு தான் நாளை வெளிவரும் என்று கூறப்படுகிறது 
 
இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியானவுடன் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்