கமலின் மகாநதி படத்திற்கு பின் திரையுலகில் உங்கள் துருவங்கள் 16 படத்திற்குதான் நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது என்று சிம்பு கார்த்திக் நரேனை பாரட்டியுள்ளார்.
துருவங்கள் 16 படம் வெளியாகும் முன்பே படத்திற்கான பாரட்டுகள் குவிய தொடங்கியது. இந்த படம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெளியானது. படம் வெளியான பின் திரைத்துறையில் இருக்கும் அனைவரும் இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டினர்.
1994ஆம் ஆண்டு வெளியான கமலின் மகாநதி திரைப்படத்திற்கு பின் உங்கள் படத்திற்குதான் திரையுலகில் நல்ல விமர்சனஙள் கிடைத்துள்ளது. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என சிம்பு இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார்.
சிம்புவின் இந்த பாராட்டுக்கு கார்த்திக் நரேன், நான் சந்தித்த மனிதர்களில், உண்மையானவர்களில் சிம்புவும் ஒருவர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.