யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளில் கலந்துகொண்ட சிம்பு & தனுஷ்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் நேற்று சென்னையில் கொண்டாடப்பட்ட நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. பல முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் எல்லா கதாநாயகர்களுக்கும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து அவர்களின் பேவரைட் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட விழா ஒன்று நடந்தது. அதில் சிம்பு மற்றும் தனுஷ் கலந்துகொண்டு யுவனுக்காக பாடலையும் பாடியுள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்