12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'மெர்சல்'

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (08:25 IST)
ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் 'சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 14, 15 தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு தென்னிந்திய திரையுலகமே குவியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த விருதுக்கு விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் மொத்தம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர்,  சிறந்த பாடகர்,  சிறந்த பாடகி, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளுக்கு 'மெர்சல்' திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரசிகர்கள் பதிவு செய்யும் வாக்குகளை பொறுத்து விருது தேர்வு செய்யப்படும்
 
ஏற்கனவே சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ள 'மெர்சல்' திரைப்படம் இதில் எத்தனை விருதுகளை வெல்லும் என்பது விஜய் ரசிகர்கள் பதிவு செய்யும் வாக்குகளில் தான் உள்ளது. 
 
மெர்சல் படத்தை அடுத்து 'விக்ரம் வேதா', அருவி, அறம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் அதிக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்