சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகம் - ஸ்ரீதேவியை அணுகும் மனோஜ்

வெள்ளி, 27 மார்ச் 2015 (10:29 IST)
1978 -இல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது சிவப்பு ரோஜாக்கள். கமல், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்த த்ரில்லர் அப்போது மாபெரும் வெற்றியை பெற்றது.
 

 
அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார், பாரதிராஜாவின் மகன் மனோஜ்.
 
இந்தப் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க மனோஜ் விரும்புகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி தமிழில் புலி படத்தில் நடித்து வருவதால் தனது விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மனோஜுக்கு.
 
ஸ்ரீதேவி சம்மதிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வெப்துனியாவைப் படிக்கவும்