தீபாவளிக்கு வெளியாகும் அஜீத் படம்

புதன், 8 ஜூலை 2015 (09:17 IST)
வீரம் படத்தை இயக்கிய சிவா அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அஜீத், ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்து வருகிறார், லட்சுமி மேனன்.
இதன் பாடல்களை இத்தாலியில் படமாக்குகின்றனர். அதிரடி ஆக்ஷன் படமாக இது தயாராகி வருகிறது. ஏ.எம்.ரத்னம் படத்தை தயாரிக்கிறார்.
 
அக்டோபர் ஒன்றாம் தேதி படத்தின் டீஸரையும், அக்டோபர் இறுதியில் பாடல்களையும் வெளியிட்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்