யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 12வது இடத்தைப் பிடித்த ஸ்ருதி படம்

புதன், 16 ஏப்ரல் 2014 (20:15 IST)
ஆந்திராவில் பிரச்சனையை கிளப்பிய ஸ்ருதியின் ரேஸ் குர்ரம் படம் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
அல்லு அர்ஜுன், ஸ்ருதி நடித்த படம் ரேஸ் குர்ரம். ரேஸ் குதிரை என்று பொருள். இந்தப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஸ்ருதி. முக்கியமாக அல்லு அர்ஜுனின் மடியில் அவர் அமர்ந்திருக்கும் போஸ்டர்கள் ஆந்திராவில் சர்ச்சையை உருவாக்கியது. போஸ்டர்கள் ஆபாசமாக இருக்கிறது என்று பலர் போராட்டம் நடத்தினர். போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. ஆபாச படம் இடம்பெறும் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது.
 
அதேநேரம் ஸ்ருதியின் கவர்ச்சியை ஒட்டி கிளம்பிய இந்த சர்ச்சை நல்ல விளம்பரமாக அமைந்தது. படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல் சென்ற வாரம் வெளியான இப்படம் ஆந்திராவில் நல்ல ஓபனிங்கை பெற்றது. அதேபோல் யுஎஸ்ஸிலும்.
 
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 12 வது இடத்தைப் பிடித்துள்ளது. படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 66 திரையிடல்களில் 84,4101 அமெரிக்க டாலர்களை வசூலித்தது. ரூபாய் மதிப்பில் 5.08 கோடிகள். அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் யுஎஸ்ஸில் இவ்வளவு பெரிய ஓபனிங்கை பெற்ற படம் ரேஸ் குர்ரம்தான் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்