கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், ''பிக்பாஸ் நிகழ்ச்சியையும், அதில் வரும் சண்டையையும் பார்க்க எனக்கு நேரம் இல்லை. மேலும் என்னால் ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கவே முடியாது. அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
மேலும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கூறிய ஸ்ருதி, 'அப்பா அரசியலுக்கு போகமாட்டேன் என்று என்னிடமும், அக்சராவிடமும் கூறியுள்ளார். அவர் வெளிப்படையாக கருத்து கூறுபவர்களில் மிகச்சிலரில் ஒருவர் என்பதில் எனக்கு பெருமை' என்று கூறினார்.