கருப்பு உடையில் ஸ்ரேயாவின் கவர்ச்சியான புகைப்படம்!

சனி, 23 ஜனவரி 2021 (12:42 IST)
நடிகை ஸ்ரேயா ஷரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த அவர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வந்தார். இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்