ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் முதல் நாள் வசூல். 40 கோடி...?

சனி, 25 அக்டோபர் 2014 (13:43 IST)
பொதுவாக ஒரு இந்திப் படம் வெளியானால் அடுத்த நாளே முதல் நாள் வசூல் என்ன என்பதை ஏரியா வரியாக வெளியிடுவார்கள். ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் விஷயத்தில் ஏதோ ஸ்டார்டிங் ட்ரபிள். இன்னும் முதல் நாள் வசூலே உறுதியாக தெரிந்தபாடில்லை.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக் நடித்த அனைத்துப் படங்களும் ஹிட் என்பதால் ஹேப்பி நியூ இயருக்கு எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. அதற்கேற்ப படமும் சக்கைப்போடு போடுகிறது. முதல் நாள் வசூலில் இந்திய அளவில் இப்படம் சாதனை படைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். 
 
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 40 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றே நாளில் 100 கோடியை கடந்து பத்து தினங்களில் 200 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கின்றனர்.
 
படம் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்தால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்