கதையை மாற்ற சொன்ன ஷாரூக்: குழப்பத்தில் அட்லீ!

வியாழன், 26 டிசம்பர் 2019 (16:07 IST)
இந்தி நடிகர் ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படத்தில் மாற்றங்கள் செய்ய ஷாரூக் கான் சொல்லியிருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த அட்லீ, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே அதை பார்த்த ஷாரூக்கான் அட்லீக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் ரஜினிகாந்த் போல இந்திய அளவிலான மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே ஷாரூக்கானின் எண்ணமாக இருந்து வருகிறது. சென்னை எக்ஸ்பிரஸ், ரா1 போன்ற படங்களிலும் கூட ரஜினி குறித்த ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்திருப்பார்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. அட்லீயின் கதையை கேட்ட ஷாரூக்கான் கதையில் தனக்கேற்றபடி சிறு மாற்றங்கள் செய்யுமாறு கூறியுள்ளாராம். அதனால் அட்லீ கதையை இந்தி ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் மாற்ற ஒரு குழுவை நியமித்து பணியாற்றி வருவதாக சினி வட்டாரத்தில் செய்தி! இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்