கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் நடிகர் சாந்தனுவும் ‘ சூரியன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘ஏற்கனவே இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம். இதுபோல எதுவும் நடக்கக் கூடாது என வேண்டிக்கொண்டார். இந்நிலையில் மோடி மற்றும் பாஜக ஆதரவாளர்கள் சாந்தணுவை கடுமையாக விமர்சனம் செய்ய அதற்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ளார் சாந்தணு.
தன் மற்றொரு டிவிட்டில் ‘முஸ்லீம்கள் ஒன்று கூடுவதைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். நான் பாஜகவை பற்றி பேசவில்லை. மதவெறி பிடித்தவர்களே! எல்லா நாளும் ரோட்டில் எல்லா மதமும் கும்பலாக சுத்துது’ எனக் கூற மீண்டும் எதிர்வினைகள் அதிகமாகின, இதையடுத்து தனது மற்றொரு டிவிட்டில் ‘பிரதமரின் கோரிக்கை நியாயமானது. ஆனால் போன முறை போல கூட்டமாக சுற்றி முட்டாள்தனம் எதையும் செய்யவேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.