பீட்டர் ஜாக்சனின் த ஹாபிட் பட சீரிஸின் மூன்றாவது படமான த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ் படம் 17 -ஆம் தேதி யுஎஸ்ஸில் வெளியானது. நாலாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துடன் ஐ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டு வருகிறது. ஒரு தமிழ்ப் படத்தின் ட்ரெய்லர் ஹாலிவுட் படம் ஒன்றுடன் வெளியாவது இதுவே முதல்முறை.