பிக்பாஸ் 4'ல் கலந்து கொள்கிறேன்? செம சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

சனி, 12 செப்டம்பர் 2020 (10:15 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

கவர்ச்சியை காட்டியே சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஷாலு ஷம்முவிற்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்ப்போது இது குறித்து பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்டதற்கு ஷாலு ஷம்மு,  "இன்னும் உறுதி ஆகல" என்று பதிலளித்துள்ளார். ஆக பிக்பாஸ் டீம் ஷாலு ஷம்முவை அணுகியுள்ளது தற்ப்போது  உறுதியாகிவிட்டது. முடிவு உறுதியானதும் ஷாலுவின் கவர்ச்சியை பிக்பாஸ் வீட்டிலே பார்க்கலாம் என இணையவாசிகள் குஷியாகிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்