யாரும் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கின்றார்கள்: ‘மண்டேலா’ படம் குறித்து பிரபல இயக்குனர்!
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (18:50 IST)
சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான திரைப்படம் மண்டேலா என்பதும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த படம் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இந்த படத்தை பார்த்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது;
இது படமல்ல பாடம். சிரித்து மகிழ்ந்து நெகிழ்ந்து பார்த்தேன். யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், அண்ணன் சங்கிலி முருகன் என அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.