பேட்ட அப்டேட்: செக்கெண்ட் லுக் வெளியீடு

வியாழன், 4 அக்டோபர் 2018 (19:02 IST)
காலா படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து  வருகிறார். 
 
காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
கல்லூரி வார்டனாக ரஜினி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி  வில்லனாக நடிக்கிறார். 
 
பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நட்சத்திரங்களுடன் மற்றொரு பிரபல நடிகரான சசிகுமாரும் இணைந்துள்ளார். 
 
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பும் வெளியாகியதை அடுத்து படம் குறித்த பல அப்டேட்டுகளும் வெளியாகி வருகின்றன. தற்போது பேட்ட படத்தின் செக்கெண்ட் லுக் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்