கடைசியாக இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து சாயிஷாவும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது போல பிசாசு நாயகி பிரயாகா அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.