சண்டக்கோழி 2 -ஆம் பாகத்தில் சத்யராஜின் வேடம்

வியாழன், 30 ஜூலை 2015 (12:08 IST)
சண்டக்கோழி இரண்டாம் பாகம் செப்டம்பர் 9 -ஆம் தேதி தொடங்குகிறது. விஷால், ராஜ்கிரணுடன் மீரா ஜாஸ்மின் சின்ன வேடத்தில் நடிக்கிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. இமான் இசை.

இந்தப் படத்தில் சத்யராஜும் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் வில்லனாக நடிப்பதாக வந்த தகவல்களை அவர் மறுத்துள்ளார். சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நான் வில்லன் கிடையாது, குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் கேட்ட போது, முடியாது என்று மறுத்தவர் சத்யராஜ். அவர் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று எப்படி செய்தி வெளியானது என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்