அப்போது, பேசிய அவர், நான் கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்து வருகிறேன். எனவே அந்த மண் மணம் குறையாமல் உள்ளது.அதனால் அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம். இப்போதும் எங்கள் வீட்டுப் பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் வணங்குவது வழக்கம் என்று தெரிவித்தார். மேலும்,எனது அடுத்தப்படம் தொரட்டி பட இயக்குநர் மாரிமுத்துவின் இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் நடிக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்கள் வெளியாகட் தயார் நிலையிலுள்ளது.