மீண்டும் சேலையில் தோன்றும் த்ரிஷா

புதன், 20 ஆகஸ்ட் 2014 (12:46 IST)
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சேலையில் தோன்றிய த்ரிஷா மீண்டும் கௌதமின் பெயரிடப்படாத படத்தில் சேலை கட்டி நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நீல நிற சேலையில் ஜெஸி நடந்து வருவதைப் பார்க்கும் சிம்புவின் மனதில் பூத்த காதல் பூ படம் பார்த்த எல்லா இளைஞர்களின் மனதிலும் பூத்திருக்கும். சேலையில் அப்படியொரு அழகுடன் திரையில் வலம் வந்தார் த்ரிஷா.

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் அவருக்கு சேலைதான் காஸ்ட்யூம். கூந்தல் நுனியை சுருட்டையாக்கி, சேலையில் த்ரிஷா தோன்றும் காட்சிகளில் விண்ணைத்தாண்டி வருவாயா எபெக்ட் கிடைக்கும் என்கிறார்கள் படயூனிட்டில்.

வெப்துனியாவைப் படிக்கவும்