கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நடித்து வரும் லிங்காவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் யார் என்பது மர்மமாகவே இருந்தது. சந்தானம் நடிக்கிறார் இல்லை வடிவேலுதான் நடிக்கிறார் இல்லையில்லை இரண்டு பேருமே நடிக்கிறார்கள் என்று குழப்பமான தகவல்கள். இந்நிலையில், லிங்காவில் நடிப்பதை தனது ட்விட்டரில் உறுதி செய்தார் சந்தானம்.
இருந்து வந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் ஹீரோவாகவும், முக்கியமான நடிகர்கள், இயக்குனர்கள் படங்களில் மட்டும் நகைச்சுவை வேடமேற்பது எனவும் இரட்டைக் குதிரை சவாரியை தேர்வு செய்தார் சந்தானம். லிங்காவில் அவர் நடிக்க இந்த புது முடிவுதான் காரணம்.