கபாலி படத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் சந்தானம். இவர் நாயகனாக நடித்த எந்தப் படமும் ஓடாத நிலையில், சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.
மாஸ் நடிகர்களின் படங்களைப் போன்று வெளியான முதல் வார இறுதியில் இப்படம் ஒரு கோடியை தாண்டி வசூலித்தது. ஆறு ஏழு கோடிகளை அனாயாசமாக தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இரண்டாவது வார இறுதியிலும் ஒரு கோடியை தாண்டியது. விஜய்யின் தெறி மூன்று வார இறுதிகளில் ஒரு கோடியை தாண்டியது. தில்லுக்கு துட்டும் அந்த சாதனையை செய்திருக்கும். ஆனால், அதற்கு வழியில்லாமல் கபாலி வெளியானது.
முந்தைய வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்த தில்லுக்கு துட்டு கடந்த வார இறுதியில் கபாலியால் வெறும் 2.79 லட்சங்களை மட்டுமே வசூலித்தது. தில்லுக்கு துட்டின் ஆக்ரோஷமான வசூலை கபாலி கட்டுப்படுத்தி சந்தானத்துக்கு ஷாக் தந்துள்ளது.