சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 23’ படத்தில் ‘லியோ’ வில்லனா? மாஸ் தகவல்..!

Siva

வியாழன், 6 ஜூன் 2024 (13:54 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக லியோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன் உள்பட பலரது நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எஸ்கே 23’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மெயின் வில்லனாக சஞ்சய் தத் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே  விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் விஜய் அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் மூலம் தமிழுக்கு வருவதாக கூறப்படுகிறது. 
 
சென்னையில் தற்போது ‘எஸ்கே 23’படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்து கொள்வார் என்றும் சிவகார்த்திகேயன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இருவரும் போதும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
‘எஸ்கே 23’படத்தை முடித்தவுடன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ’சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் சல்மான் கான் , ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பெருட்செலவில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்