பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?... தொடங்கிய பேச்சுவார்த்தை!

சனி, 4 ஜூன் 2022 (09:27 IST)
நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 –ஐ தொகுத்து வழங்குவதற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 – ஐ தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக நாகார்ஜுனாவுக்கு பதிலாக சில எபிசோட்களில் சமந்தா பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்