சாதாரண நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த சமந்தா விரைவில் ஆந்திராவின் பாரம்பரியமிக்க அக்னியேனி குடும்பத்தின் மருமகளாகப் போகிறார். இந்த நேரத்தில் சமந்தாவை சந்திக்கு இழுக்கும் வகையில் சில விஷமிகள், அவரது பழைய படங்களில் உள்ள கவர்ச்சிக் காட்சிகளையும், படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
குறிப்பாக மாஸ்கோவின் காவிரி படத்தில் அவர் நடித்த நெருக்கமான காதல் காட்சிகளை இப்போது தூசிதட்டி வெளியிட்டுள்ளனர். சமந்தா நடித்த படம்தான் அது. எனினும் அதனை வெளியிடும் நேரமும், அதற்கு பின்னாலுள்ள குரூர எண்ணமும் ஒருபோதும் மன்னிக்க முடியாதவை.