நித்யா மேனன் வாய்ப்பை தட்டி சென்ற சமந்தா!!

புதன், 14 டிசம்பர் 2016 (14:03 IST)
சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி படப்பிடிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். 


 
 
இந்நிலையில், நாக் அஷ்வின் சமந்தாவை சந்தித்து இந்த படத்தின் கதையை சொல்லி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சமந்தாவும் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், “நல்ல கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்க இருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்” என்று சமந்தா குறிப்பிட்டு உள்ளார். 
 
ஏற்கனவே நடிகை நித்யாமேனனை சாவித்திரியாக நடிக்க வைக்க டைரக்டர் நாக் அஷ்வின் முடிவு செய்து இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதில் சமந்தாவை தேர்வு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்