லிங்கா நஷ்டம் - சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படத்துக்கு தமிழகத்தில் தடை

செவ்வாய், 7 ஜூலை 2015 (16:48 IST)
சல்மான்கான் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. வழி தவறிப்போன பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருத்தியை சல்மான்கான் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைப்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
 

 
இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட விநியோகஸ்தர்கள் தடை விதித்துள்ளனர்.
 
லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இணை தயாரிப்பாளர். ஈராஸ் படத்தை வெளியிடுகிறது. லிங்கா நஷ்டமடைந்த விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் கேட்ட நஷ்டஈடை ராக்லைன் வெங்கடேஷ் இன்னும் தரவில்லை என்பதை காரணம் காட்டி இந்தத் தடையை அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்