"எனது குடும்பத்தினர் தங்கலை பார்த்துவிட்டு, சுல்தானைவிட சிறப்பாக இருப்பதாக கூறினர். தனிப்பட்ட முறையில் உங்களை விரும்பினாலும், அமீர் கான், தொழில்முறையில் உங்களை வெறுக்கிறேன்" என அதில் கூறியிருந்தார்.
இந்த வெறுப்பு அமீர் கான் அவ்வளவு திறமையானவர் என்பதை சொல்லாமல் சொல்லியதால் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் சல்மானின் வெறுப்பு ட்வீட்டால் அகமகிழ்ந்துள்ளனர். "சல்லு, உங்களது வெறுப்பில் நான் அன்பை மட்டுமே உணர்கிறேன்" என்று அமீர் கான் பதில் ட்வீட் செய்ய, பாலிவுட் முழுக்க உணர்ச்சிகரமான மனநிலையில் உள்ளது.