பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற முகின், மக்களின் மனதை கவர்ந்த தர்ஷன், கவின், லாஸ்லியா ஆகியோர்களுக்கு கூட இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் நெகட்டிவ் இமேஜ் பெற்ற சாக்சி அகர்வாலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது
ஆர்யாவும் அவருடைய மனைவி சாயிஷாவும் ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார். டி. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தற்போது சாக்சி அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கேரக்டர் சாக்சி அகர்வாலுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு ரீஎன்ட்ரி ஆக இருக்கும் என கருதப்படுகிறது