சைத்தான் இயக்குனர் படத்தில் சிபி

புதன், 28 செப்டம்பர் 2016 (16:12 IST)
சைத்தான் படத்தை இயக்கியிருக்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் புதிய படத்தில் நடிக்க சிபி ஒப்புக் கொண்டுள்ளார். த்ரில்லர் படமாக இது தயாராகிறது.
 

 
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் சைத்தான் படம்தான் பிரதீப்பின் முதல் படம். அதன் ட்ரெய்லரே மிரட்டுகிறது. அதைப் பார்த்தே அடுத்தப்பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
 
பிரதீப்பின் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கும் சிபி, நவம்பரில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்