சபாஷ் நாயுடுவில் ஹாலிவுட் கலைஞர்கள்

சனி, 30 ஏப்ரல் 2016 (17:12 IST)
கமலின் புதிய படம் சபாஷ் நாயுடுவில் ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிய இருப்பதாக கமல் தெரிவித்தார்.


 
 
சபாஷ் நாயுடு படத்தில் கமல் தசாவதாரத்தில் ஏற்று நடித்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை செய்கிறார். 
 
படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கவிருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
 
மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கும் படப்பிடிப்பில் ஹாலிவுட் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்க இருப்பதாக அப்போது கமல் கூறினார். ஹாலிவுட் மற்றும் இந்திய கலைஞர்களின் கூட்டு உழைப்பில் சபாஷ் நாயுடு தயாராகிறது.
 
யுஎஸ் ஷெட்யூல்ட் முடிந்த பின் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்