சந்தானத்தின் சபாபதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனி, 30 அக்டோபர் 2021 (10:00 IST)
சந்தானம் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே முடிந்த சபாபதி படத்தின் ரிலிஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று சபாபதி என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து இந்த படத்தை ரிலிஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நவம்பர் 19 ஆம் தேதி பார்டர், முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களுடன் சபாபதி ரிலிஸாகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்