சபாஷ் நாயுடுவை மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, ஸ்ருதி சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை அவருக்குப் பதில் கமலே இயக்கி வருகிறார். அமெரிக்காவில் குறிப்பிட்ட தினங்களுக்குள் படத்தை முடிக்க வேண்டியிருப்பதால் ராஜீவ்குமாருக்காக காத்திருக்க முடியாத நிலை. அதனால், வேறு வழியின்றி இயக்குனர் பொறுப்பையும் கமல் ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜீவ்குமார் உடல்நிலை தேறி வரும்வரை இயக்கத்தை கமலே கவனிக்க உள்ளார்.