தணிக்கைத்துறையின் விதிமுறைகளை தமிழில் புத்தகமாக வெளியிடும் எஸ்.வி.சேகர்

வியாழன், 2 ஜூலை 2015 (14:20 IST)
தணிக்கைத்துறை என்பது ஒரு மாயை துறை. அவர்கள் எதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள், எதற்கு ஏ சான்றிதழ் தருவார்கள் என யாராலும் கணிக்க முடியாது. திரைப்படத்தின் அரிச்சுவடி அறியாத பலரும் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக திரைப்படங்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
 
நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தணிக்கைக்குழு உறுப்பினராக இருக்கிறார். தணிக்கைத்துறையின் தவறான செயல்பாடுகளுக்கு முலாம் பூசும் பணியை அவ்வப்போது அவர் செய்வதுண்டு. ஆனால், அவர் இப்போது செய்திருக்கும் பணி பாராட்டத்தக்கது. 
 
தணிக்கைத்துறையின் விதிமுறைகள் ஆங்கிலத்தில், அதுவும் மிகச்சிறிய எழுத்துக்களில் படிக்க முடியாதபடிதான் நமக்கு கிடைக்கின்றன. அதனை தமிழில் மொழிப்பெயர்த்து 250 பக்கங்கள் வரும் புத்தகமாக பதிப்பித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
 
தணிக்கைத்தறையின் விதிமுறைகள் தெரியாமல் படமெடுக்கிறார்கள். இதனால் பணம், நேரம், உழைப்பு எல்லாம் வீணாகிறது. தணிக்கை விதிமுறைகள் படிக்க எளிதாக கிடைத்தால், அதனை படித்து அதற்கேற்ப படமெடுக்கலாம், தயாரிப்பாளர்களுக்கும் வீண் செலவு இல்லை. தணிக்கையில் வெட்டி விடுவார்களோ என்ற பயமும் இல்லை.
 
புத்தகம் எப்போ கடைக்கு வருகிறது?

வெப்துனியாவைப் படிக்கவும்