‘ரூல் நம்பர் 4' திரை விமர்சனம்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:31 IST)
YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்து,பாஸர் இயக்கத்தில் ஏகே பிரதீஸ்  கிருஷ்ணா நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ரூல் நம்பர் 4.'

இத் திரைப்படத்தில் ஸ்ரீகோபிகா,மோகன் வைத்யா,ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ்,கலா பிரதீப் உட்பட பலர்  நடித்துள்ளனர். ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு,ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் தோன்றுகிறது.

இந்த நிலையில் ஒரு நாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒரு தரப்பினர் திட்டமிடுகிறார்கள். இதற்காக வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறார், அதற்கான பலன் என்ன என்பது தான் படத்தின் கதை.

ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டு இலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில்  உள்ள ஐந்து பாடல்களுக்கும் சிறப்பாக   இசையமைத்துள்ளார்கெவின் டெகாஸ்டா. படத்தின் ஒளிப்பதிவு அருமையாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் டேவிட் ஜான் தீரஜ் சுகுமாறனின்  பின்னணி இசை படத்திற்கு பலம்.

எஸ்.பி.அஹமது எடிட்டிங் வேலையில் தன் திறமையை காட்டியிருக்கிறார். நடன இயக்குர் அஜய் காளிமுத்து படத்திற்கு மிகவும் மெனக்கெட்டுள்ளர். ஸ்டண்ட் மாஸ்டர் ராக் பிரபுவின் சண்டைக் காட்சிகள் சிறப்பு. விறுவிறுப்பான கதைக்களம்,அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ளது.

மொத்தத்தில் "ரூல் நம்பர் 4" திரைப்படம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்