அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த படம் ருத்ரமாதேவி. இப்படத்தை இந்தியன் பிலிம் பெடரேஷன் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.
இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தெலுங்கு தேச ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ருத்ரமாதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியது.
இப்படத்தில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். வசூல் ரீதியில் மிக பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் நன்கு பேசப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் குணசேகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்