‘ஆர்.ஆர்.ஆர்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? எஸ்.எஸ்.ராஜமெளலி டுவிட்

திங்கள், 29 நவம்பர் 2021 (16:16 IST)
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
இந்த ட்ரெய்லர் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது ஆக கூறப்படுகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்